Home One Line P1 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை!

2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை!

1107
0
SHARE
Ad
படம்: சாபாவி ராசிட்

கோலாலம்பூர்: நேற்றிரவு செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில், தலைமை பயிற்சியாளர் டான் செங் ஹோவின் மலேசிய காற்பந்து அணி இந்தோனிசியாவை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

29-வது மற்றும் 72-வது நிமிடத்தில்  சாபாவி ராசிட் அடித்த முதல் கோல் மலேசியாவை முன்னிலையில் வைத்தது.

இந்தோனிசிய அணி பல முறை கோல் அடிக்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது.

#TamilSchoolmychoice

முன்னதாக, கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தோனிசியாவை மலேசிய அணி 3- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஏஎப்எப் சுசுகி கோப்பையை ஐந்து முறை வெற்றிக் கொண்ட தாய்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் நவம்பர் 14-ஆம் தேதியன்று புக்கிட் ஜாலிலில் வீழ்த்தியது.

இதனிடையே, இந்தோனிசியா தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக மலேசியா மூன்று புள்ளிகளைப் பெற்று ஜி குழுவில் ஒன்பது புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த முடிவானது சீனாவில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை எட்டுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனிசியாவுக்கு எதிரான போட்டியை அடுத்து, மலேசியா அடுத்த ஆண்டு மார்ச் 26 ஐக்கிய அரபு எமிரேட்ஸை அணியை எதிர்கொள்ள உள்ளது. அதன் பிறகு, வியட்நாம் அணியை புக்கிட் ஜாலிலில்  மார்ச் 31-இல் சந்திக்க உள்ளது.  மீண்டும் தாய்லாந்தை அதன் சொந்த அரங்கில் ஜூன் 9-ஆம் தேதியன்று சந்திக்கஇருக்கிறது.

இதனிடையே, மலேசியாவிற்கும் இந்தோனிசியாவிற்கும் இடையிலான நேற்றைய ஆட்டம் முடிவடைந்ததும் ஏற்பட்ட பதற்றம் காரணத்தினால் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் மொக்ஸைன் முகமட் ஜோனை தொடர்பு கொண்டபோது இக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியதாக மலேசியாகினி தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் இரு அணிகளின் ஆதரவாளர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஆவணப்படுத்தல் பணிகள் நடைபெற்ற பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்என்று அவர் கூறினார்.