Home நாடு இடைநிலைப் பள்ளிகளில் 1,709 மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை!

இடைநிலைப் பள்ளிகளில் 1,709 மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை!

1001
0
SHARE
Ad

காஜாங்: 1,709 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதை தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு முகமை (National Anti-Drugs Agency) கண்டறிந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் மேற்கொண்ட சோதனைகளில், 13 முதல் 17 வயது வரையிலும் உள்ள 41,000 மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய போதை பொருள் எதிர்ப்பு முகமையின் தலைமை இயக்குனர், டத்தோஶ்ரீ சுல்கிப்லி அப்துல்லா கூறினார்.

மாணவர்களிடையே போதைப் பொருள் அதிகமாக பயன்பாட்டில் இருப்பது கவலைக்கிடமாக இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த பரிசோதனைகள் வாயிலாக 178 வட்டாரங்கள் உயர் ஆபத்தான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, மக்கள் 24 மணி நேர நேரடித் தொலைப்பேசித் தொடர்பு எண்களான 03-89112233 அல்லது 019-6262233-க்கு அழைத்து தெரியப்படுத்தலாம்.