Home இந்தியா இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தீ விபத்து!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தீ விபத்து!

802
0
SHARE
Ad

குஜராத்: இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO), தீ விபத்து ஏற்பட்டதாக சீனாவின் சின்ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த தீவிபத்தில் உயிர் சேதங்கள் குறித்த எந்த விபரங்களும் பெறப்படவில்லை.

தீக்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை.

அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில் (Space Application Centre, SAC) இதே மாதிரியான தீ சம்பவம், ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த மையமானது இஸ்ரோவின் மிகப் பெரிய ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது.

#TamilSchoolmychoice

தலைமை தீயணைப்பு அதிகாரி எம்.எப். டஸ்தூர் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை எஸ்.ஏ.சி வளாகத்தில் நடந்த இந்த தீ சம்பவத்தில் ஒரு சில பழைய நூல்கள் மட்டுமே எரிந்தன என அவர் கூறினார்.