Home நாடு கேமரன் மலை: சிவராஜ் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது!

கேமரன் மலை: சிவராஜ் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது!

814
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: வருகிற 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சி. சிவராஜ் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. மேலும், அவர் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு அனுமதி இல்லை என அதன் தலைமை ஆணையர் அசார் ஹருண் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலின், அத்தொகுதியில் வெற்றிப் பெற்ற அவர், அத்தொகுதியில் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கேமரன் மலை நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி செல்லாது என கடந்த நவம்பர் மாதம், கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியது.