Home நாடு மீண்டும் மகளை மீட்டுத் தந்த ஆழிப் பேரலை!

மீண்டும் மகளை மீட்டுத் தந்த ஆழிப் பேரலை!

1537
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆழிப் பேரலைச் சம்பவத்தில் தமது மகள், துளசி, பேரலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, பின்பு 30 நிமிடம் கழித்து மீண்டும் அதே அலைகளால், அவள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டதை அவரது தந்தை சுப்பையா ஸ்டார் ஒன்லைன் செய்தி ஒன்றின் வாயிலாக நினைவுக்கூர்ந்தார்.

பினாங்கு மியாமி கடற்கரையை ஒட்டி உள்ள அவரது உணவகத்தை பேரலைத் தாக்கியபோது, மெத்தை மீது இருந்த 22 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கடல் அலைகள் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது எல்லா செய்தி ஊடகங்களிலும் பகிரப்பட்டது.

கடந்த சனிக்கிழமையன்று இந்தோனிசியாவில் ஆழிப் பேரலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுப்பையா மிகவும் வருந்துவதாகத் தெரிவித்தார். 70 வயதான, சுப்பையா, தமது மகள் அச்சம்பவத்தில் உயிர் தப்பியது கடவுள் தந்த விலைமதிப்பற்ற பரிசு எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை கடலுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சுப்பையா, அவரது மகள் துளசியுடன் கடற்கரைக்குச் சென்று மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்துக் கொண்டார்.

(படம்-செய்தி: நன்றி ஸ்டார் இணையத் தளம்)