Home Featured நாடு நஜிப்பின் சொத்துக்களை முடக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் – அனினா அதிரடி!

நஜிப்பின் சொத்துக்களை முடக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் – அனினா அதிரடி!

919
0
SHARE
Ad

Aninaகோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின்.

2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நஜிப் மீது வழக்குத் தொடுத்த அவர், தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, இன்னும் ஒரு படி மேல் போய், நஜிப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கக் கோரி இன்று காலை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி பெறப்பட்டது குறித்து, அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார் என்று கூறி அண்மையில் அனினா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் அனினா வழக்குத் தொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அனினாவின் வழக்கறிஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா கூறுகையில், “நஜிப்பின் சொத்துகளை முடக்கி வைக்கக் கோரும் அனினாவின் மனு இன்று காலை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது”

இந்த வழக்கு முடியும் வரையில் சொத்துகளை முடக்கி வைக்கும் படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகவும் ஹனிப் தெரிவித்துள்ளார்.

அனினாவில் பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, கோலாலம்பூர் ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள நஜிப்பின் வீடு மற்றும் மீதி 650 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை ஆகிய சொத்துக்களின் மீது தடை உத்தரவு கோரியுள்ளார்.

மேலும், இன்னும் 10 நாட்களுக்குள், நஜிப் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை பட்டியலிட்டு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும், தனது பெயரில் உள்ள பங்குகள் பற்றி வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை உத்தரவிடக் கோரியும் அனினா மனுத்தாக்கல் செய்துள்ளார்.