Home Featured நாடு “அனினாவின் தைரியத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்” – மகாதீர்

“அனினாவின் தைரியத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்” – மகாதீர்

601
0
SHARE
Ad

Dr Mahathirகோலாலம்பூர்- அண்மையில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் லங்காவி மகளிர் பிரிவு உறுப்பினரான அனினா சாவ்டுடினின் தைரியத்தை எண்ணி தாம் பெருமிதம் கொள்வதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் உயர்நிலை தலைவர் (பிரதமர் நஜிப்) குறித்த உண்மைகளைப் பேசும் தைரியசாலிகள் அதிகம் பேர் இல்லை. ஏனெனில் தாங்கள் துரோகிகள் என அழைக்கப்படுவோம் என்கிற அச்சமே காரணம். எனினும் உண்மைகள் பேசப்பட வேண்டும். உண்மையைப் பேசுவதைக் எப்போதுமே கைவிடக் கூடாது. உங்களைப் போன்றவர்களே (அனினா) நம் நாட்டிற்குத் தேவை” என அனினாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மகாதீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனினா தொடர்ந்து குரல் கொடுத்து வருவார் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அம்னோவில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கு தமது கவலையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

“உண்மையைப் பேசுவதால் அது உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். எனினும் நீங்கள் (அனினா) தொடர்ந்து உண்மையைப் பேசுவீர்கள் என நம்புகிறேன்” என மகாதீர் தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.