Home Featured நாடு எம்எச் 370: விமானப் பாகத்தை ஆய்வு செய்தால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் – லியாவ்

எம்எச் 370: விமானப் பாகத்தை ஆய்வு செய்தால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் – லியாவ்

528
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோல திரங்கானு- அண்மையில் கண்டெடுக்கப்பட்ட எம்எச் 370 விமானப் பாகத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைக்கக் கூடும் என போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரீயூனியன் தீவில் விமான இறக்கைப் பகுதியுடன் தொடர்புடைய பெரிய பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்தட் பாகத்தை மேலும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில், மாயமான விமானத்தின் மற்ற பாகங்கள் இருக்கும் இடம் குறித்து முக்கியக் தகவல்கள் கிடைக்கும் என லியோவ் நம்பிக்கை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அத்தகைய தகவல்கள் விமானத்தை தேடும் வியூக செயல்குழுவிற்கு உதவிகரமாக இருக்கும். தேடுதல் நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஏற்படும்.”

“கடந்த மாதம் பிரான்சின் துலூஸ் நகரில் மலேசிய குழு விமான பாகத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்த தகவல்களை உறுதி செய்தமைக்காக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாயமான விமானத்தில் சென்ற பயணிகளின் குடும்பத்தாருக்கு இது சோதனையான காலகட்டம்தான். மலேசிய தேசம் என்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்,” என்றார் லியாவ்.

சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து விமானத்தை தொடர்ந்து தேடும் பணியில் மலேசியாவும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.