Home Featured நாடு ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு

ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு

530
0
SHARE
Ad

Mohd-Rafiq-Naizamohideenalvinபுத்ராஜெயா- சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது.

தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை ஆல்வின் டான் பதிவு செய்ததையடுத்து சர்ச்சை வெடித்தது. எனினும் அண்மைய முகநூல் பதிவிலும், தமது வலது தொடையில் அல்லாஹ் என்று ஆல்வின் பச்சை குத்தியிருந்த படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆல்வின் டான் மலேசியர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களைப் பலமுறை புண்படுத்தி உள்ளதாக அம்னோ இளைஞர் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் ரஃபிக் நைசாமொகிடீன் கூறினார்.

#TamilSchoolmychoice

“ரமலான் சமயத்தில் முகநூலில் பக்குத்தே தொடர்பில் பதிவிட்டிருந்தார். அடுத்து இஸ்லாமியர்கள் புனிதமான ஒன்றாகக் கருதும் ‘அசாம்’ பாடலை கேலி செய்யும் விதமாக அவர் பாடும் காணொளிப் பதிவு வெளியானது. இப்போது அல்லாஹ் என்று பச்சை குத்தியுள்ள படம் வெளியாகியுள்ளது. எனவே சட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக அவரை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும்.

“தற்போது ஆல்வின் டானுக்கு எதிராக நாம் செயல்படவில்லை என்றால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். பிறகு குற்றம் இழைத்துவிட்டு வெளிநாடு சென்றுவிடலாம் எனும் எண்ணம் மேலும் பலருக்கு ஏற்படக்கூடும்,” என்று ரஃபிக் தெரிவித்தார்.

முன்னதாக ஆல்வின் டானை நாடு கடத்துவது தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்துறை அமைச்சில் அம்னோ இளைஞர் பிரிவு சார்பில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.