Home இந்தியா சென்னை- மங்களூர் ரயில் விபத்து: மீட்புப் பணிகள் முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

சென்னை- மங்களூர் ரயில் விபத்து: மீட்புப் பணிகள் முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

623
0
SHARE
Ad

44சென்னை – சென்னை-மங்களூர் விரைவு ரயில், விருத்தாசலம் அருகே நேற்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 42 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர்  50 பேர் மீட்புப் பணியை விரைந்து முடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை 750 ரயில்வே ஊழியர்கள் உடனடியாகச் செப்பனிட்டு முடித்துள்ளனர். காலை 7:00 மணிக்குத் துவங்கிய இப்பணி மாலை 6:00 மணிக்கு முடிந்தது.

முதலில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரயில் (எண்.16713) 9:00 மணிக்குச் சீரமைத்த பகுதியில் குறைந்த வேகத்தில் கடந்து சென்றது. பின்பு கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்களும் சென்றன.

விபத்திற்கான காரணம் குறித்து அந்த ரயில் பயணிகளிடம் விசாரித்த போது  ரயில் புறப்பட்டதில் இருந்தே பெட்டிகள் சற்றுக் குதித்து குதித்துச் செல்வது போல இருந்ததாகக் கூறினர்.

முறையான பராமரிப்பின்றி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், வழித்தடத்திற்கு மேலே செல்லும் மின் கம்பியில் ‘டி 1’ பெட்டிக்கு மேலே பெரியளவில் தீப்பொறி ஏற்பட்டு இரு முறை break போட்டதாகவும், அதன்பிறகே பெட்டிகள் கவிழ்ந்ததாகவும் சிலர் கூறினர்.

ஆனால், ரயில்வே ஊழியர்கள் பூவனூர் ரயில் நிலையம் அருகே இரும்புப் பாதையில் விரிசல் ஏற்பட்டிருந்ததே விபத்திற்குக்  காரணம் என்கின்றனர்.

இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.