Home உலகம் வங்கதேசத்தில் தேர்தலுக்கு பிறகும் வன்முறை தொடர்கிறது

வங்கதேசத்தில் தேர்தலுக்கு பிறகும் வன்முறை தொடர்கிறது

455
0
SHARE
Ad

bangaladesh

தாகா, ஜன 8- வங்க தேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறையில் 5 பேர் பலியாகினர். வங்க தேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலை எதிர்த்து கடந்த ஒரு மாதத்தில் எதிர்கட்சிகளால் நடைபெற்ற வன்முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த தேர்தலை வங்கதேச தேசிய கட்சியின் தலைமையில் 18 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணித்தன. கடந்த ஞாயிறு அன்று தேர்தலில் வாக்களிக்க சென்றவர்களை வன்முறையாளர்கள் தடுத்து தாக்கினர்.

நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசியும், வாக்குசீட்டுகளை கொளுத்தியும் எதிர்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். இந்த தேர்தலில் 153 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். வாக்குபதிவு நடைபெற்ற 147 தொகுதிகளில் 107 இடங்களில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து இக்கட்சிக்கு 231 இடங்கள் கிடைத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக எதிர்கட்சிகள், கடந்த திங்கட்கிழமை முதல் 2 நாள் முழு வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆளும் அவாமி லீக் தொண்டர்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 5 பேர் இறந்தனர், 10 பேர் படுகாயமடைந்தனர். வங்கதேச தேசிய கட்சியை சேர்ந்த 7 முக்கிய தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் எதிர்கட்சி கொறடாவான ஷைனுல் அப்தின் பரூக், கலீதா ஜியாவின் ஆலோசகர் காந்தகர் மொகபூப் ஹுசைன் ஆகியோரும் அடங்குவர். இக்கட்சியின் தலைவர் கலீதா ஜியா 2 வாரகாலத்துக்கு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.