Home இந்தியா “கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை” – அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை!

“கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை” – அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை!

765
0
SHARE
Ad

alagiri

#TamilSchoolmychoice

சென்னை, ஜனவரி 8 – தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் திமுக எப்படி உருப்படும் என அழகிரி தெரிவித்த கருத்துக்கும், திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திமுகதலைவர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளதோடு கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அழகிரியை எச்சரித்துள்ளார்.

மேலும் தேவையில்லாத கருத்துகளை வெளியிட்டு, கட்சியின் கட்டுப்பாட்டைசீர்குலைக்க நினைத்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், உறுப்பினர்பதவியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுவர் என்று மு.க.அழகிரி உள்படதிமுகவினர் அனைவரையும் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை கருணாநிதி  வெளியிட்ட அறிக்கையில் மக்களின் அந்த நம்பிக்கையைத் திசை திருப்பும் வகையிலும், திமுக –தேமுதிக இடையே கூட்டணி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் இரு கட்சிகளின்முன்னோடிகளைப் பற்றி விமர்சனங்களையும், விஷமத்தனமான தகவல்களையும்பத்திரிகைகள் வெளியிடுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சிதான் என்று தான் கூறியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பத்திரிகைகள் இவ்வாறுவிமர்சனக் கணைகளைத் தொடங்கியுள்ளன என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

“தேமுதிகவோடு கூட்டணி வேண்டாம் என்றுமு.க.அழகிரி கூறியதாக ஒரு செய்தி வெளியிடப் பட்டுள்ளது. அந்த செய்திக்கும், கூட்டணி வேண்டாம் என்று அழகிரி கூறியிருந்தால் அந்தக் கருத்துக்கும், திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஏனென்றால் எந்தெந்தக் கட்சிகளோடு கூட்டணி சேர்வது என்று தீர்மானிப்பதுதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு அல்லது அந்தக் குழுக்களால் அதிகாரம்தரப்பட்ட திமுகவின் தலைமை மட்டும்தான்” என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ள கருணாநிதிதேமுதிகவுடன் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று நான் கூறியகருத்துக்கு எதிராக மு.க.அழகிரியின் பேட்டி அமைந்திருப்பது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது, இது போன்று தேவையில்லாத கருத்து மாறுபாடுகளைவெளியிட்டு, திமுகவின் கட்டுப்பாட்டைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யாராகஇருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுகவின்உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படுவர் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.