Home உலகம் வெனிசுலாவின் முன்னாள் அழகி கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

வெனிசுலாவின் முன்னாள் அழகி கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

511
0
SHARE
Ad

monica-spear-467

கராகஸ், ஜன  8- வெனிசுலா நாட்டின் அழகியாக கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோனிகா ஸ்பியர் (29). அமெரிக்காவில் வசித்து வந்த அவர் நெடுந்தொடர் ஒன்றில் நடித்துவந்தார். இந்நிலையில் அவரது முன்னாள் கணவர் ஹென்ரி பெர்ரி (39) மற்றும் அவர்களது 5 வயது குழந்தையுடன் வெனிசுலாவில் ஓய்வெடுக்க வந்திருந்தனர்.

அவர்கள் மத்திய வெனிசுலாவில் உள்ள பியூர்ட்டோ காபெல்லோ மற்றும் வேலன்சியா நகருக்கிடையே நெடுஞ்சாலையில் காரில் வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று சுட்டது.

#TamilSchoolmychoice

இதில் மோனிகாவும் அவரது முன்னாள் கணவர் ஹென்ரியும் கொல்லப்பட்டனர்.

ஆனால், அவர்களது 5 வயது குழந்தை மட்டும் காலில் குண்டு காயத்துடன் உயிர்பிழைத்தது. வெனிசுலாவின் உயர் வழக்ககாக கருதப்படும் இக்கொலைச் சம்பவம் தென் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உலகில் அதிகம் வன்முறை நடக்கும் நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.