Home நாடு மலாக்கா நியமனங்களை மசீச தலைவர் ஆராய வேண்டும்!

மலாக்கா நியமனங்களை மசீச தலைவர் ஆராய வேண்டும்!

534
0
SHARE
Ad

Speech-By-MCA-Youth-National-Chairman-Datuk-Dr-Ir-Wee-Ka-Siong-At-The-MCA-Youth-46th-AGMகோலாலம்பூர், ஜன 8 – மலாக்காவில் மசீச கட்சி நகராட்சி மற்றும் மாநகர மன்ற உறுப்பினர் பதவிகளின் நியமனத்தை தள்ளி வைக்குமாறு அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி இட்ரிஸ் ஹாரோனுக்கு மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கடிதம் எழுதியுள்ளதாக மசீச துணைத்தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் (படம்) கூறியுள்ளார்.

இது குறித்து வீ கா சியாங் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “மலாக்கா மாநில அரசாங்கம் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் பதவி ஏற்பு சடங்குகளையும் தள்ளி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. எனினும், மசீச மன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்வுகளை மட்டும் தள்ளி வைக்குமாறு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

மசீச தேசியத் தலைவர் பதவி நியமனங்களையும், வேட்பாளர்களையும் ஆராய்ந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய காரணத்தினால் தான் பதவி ஏற்பு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் வீ கா சியாங் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இதற்கு முன்பு மசீச வில் இருந்து 18 உறுப்பினர்கள் என்று கூறப்பட்டதாகவும், ஆனால் நேற்று 15 பேர் மட்டுமே பதவி ஏற்பு நிகழ்விற்கு அழைக்கப்பட்டதாகவும் வீ கா சியாங் குறிப்பிட்டார். பதவி ஏற்பு தள்ளி வைக்க இதுவே முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.