Home வாழ் நலம் கோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம் !

கோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம் !

530
0
SHARE
Ad

juice

கோலாலம்பூர், ஜன 10 – இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படும் என்று உளவியல் ஆய்வு இதழ் ஒன்று தனது ஆய்வேட்டில் வெளியிட்டுள்ளது. இனிப்புப் பதார்த்தங்களை விட, இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பது மிக நல்லது.

இனிப்பு பழச்சாறுகளை அருந்துவது கோபத்தை மனதளவில் கட்டுப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

குறிப்பாக இனிப்பு பானங்களைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் டாம் டென்னிசன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் இனிப்புப் பான பிரியர்களுக்கு ஓர் இனிமையானதுதான். ஆனால் அமிழ்தமும் அளவோடு இருப்பது நல்லது என்கிறார்கள் நம் முன்னோர்கள்!