Home தொழில் நுட்பம் இன்று செல்லியல் 2.0 – புதிய நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் அறிமுகம்!

இன்று செல்லியல் 2.0 – புதிய நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் அறிமுகம்!

637
0
SHARE
Ad

selliyal 1கோலாலம்பூர், ஜன 10 – பல புதிய மேம்பாடுகளைக் கொண்டுள்ள  “செல்லியல் 2.0” உருவாக்கத்தின் அறிமுக விழா இன்று வெள்ளிக்கிழமை 10 ஜனவரி 2014, மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (டைனாஸ்டி தங்கும் விடுதிக்கு அருகில்) நடைபெறுகின்றது.

2013ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் அறிமுகம் கண்ட செல்லியல், தமிழை பல படிநிலைகளில் தொழில்நுட்பத்தோடு இணைத்து இணையம் முதல் திறன்பேசிகள் வரை புதிய ஊடகங்களின் வழி ஆயிரக் கணக்கான பயனர்களை அடைந்துள்ளது.

மலேசியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையத்தோடு கையடக்கக் கருவிகளிலும் தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் ஒரே ஊடகமான செல்லியல் தனது கடப்பாட்டிலிருந்து வழுவாது தன் தொழில் நுட்ப அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இதுவரை பெற்ற அனுபவங்களையும் பயனரிடம் இருந்து பெற்றக் கருத்துகளையும் வைத்து, ஆசிரியர் குழுவினரும், தொழில்நுட்பக் குழுவினரும் இணைந்து செல்லியலின் அடுத்தக் கட்ட மேம்பாட்டுக்கு அடிப்படை அமைத்திருக்கின்றனர். இந்த மேம்பாட்டில் பல அம்சங்களைச் சேர்த்திருப்பதுடன் புதிய பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் உருமாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இன்றைய இந்த அறிமுக நிகழ்வில் செல்லியலின் இணை நிறுவனரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் இந்தப் புதிய உருவாக்கத்தைப் பற்றி செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கங்களை வழங்குவார்.

அறிமுக நிகழ்வு நிறைவு பெற்றவுடன், செல்லியலில் இணைக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்ப அம்சங்கள் குறித்த விளக்கங்கள் செல்லியலில் இடம் பெறும்.