Home நாடு தற்போதைக்கு டோல் கட்டணம் உயர்வு கிடையாது- நஜிப்

தற்போதைக்கு டோல் கட்டணம் உயர்வு கிடையாது- நஜிப்

605
0
SHARE
Ad

Najib

ரவாங், ஜன 10 – இவ்வாண்டின் டோல் கட்டணங்கள் உயர்வு குறித்து அரசாங்கம்  எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

நேற்று சுங்கை புவாயா டோல் சாவடியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த  பிரதமர் ,  டோல் கட்டண உயர்வுக் குறித்து  தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அந்த ஆய்விற்க்கு பின்னரே டோல் கட்டண உயர்வு குறித்து முடிக்கவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மக்களின்  சுமையைக் குறைப்பதற்கான சிறந்த வழியை அரசாங்கம்   அடையாளங்கண்டு வருகிறது ஆகையால், அரசாங்கம் மக்களின் நலனில் சிறிதளவும் அக்கறைக் கொள்ளவில்லை என்று எதுவும்  கூற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும் பேசிய அவர், மக்களின் ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசாங்கம் மிகுந்த அக்கறையும் கடப்பாடும் பரிவும் கொண்டுள்ளது  என்றும் அதற்கு 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையிலுமான டோல் கட்டண ஒத்திவைப்பு நடவடிக்கை ஓர்  சிறந்து உதாரணமாகும் என்று  அவரி சுட்டிக்காட்டினார்.