Home நிகழ்வுகள் ‘மக்கள் குரல் எங்கள் சக்தி’ இயக்கத்தின் பொங்கல் கலைவிழா!

‘மக்கள் குரல் எங்கள் சக்தி’ இயக்கத்தின் பொங்கல் கலைவிழா!

642
0
SHARE
Ad

Slider-Ponggalபிப்.13- மலேசிய  ‘மக்கள் குரல் எங்கள் சக்தி’ இயக்கம் பண்டமாரான் சட்டமன்ற தொகுதியுடன் இணைந்து படைக்கும் பொங்கல் கலைவிழா எதிர்வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை பண்டமாரான் பூப்பந்து அரங்கில் நடைபெறுகிறது.

இக்கலைவிழா  இரவு 7.30 மணி தொடங்கி இரவு 11.30 மணி வரையில் நிகழ்வுகள் நடைப்பெறவுள்ளதாக  மலேசிய மக்கள் குரல் எங்கள் சக்தி இயக்கத்தின் தலைவரும் பொங்கல் கலைவிழா ஏற்பாட்டுக்குழு தலைவருமான மக்கள் சக்தி வடி வேலன் தெரிவித்தார்.

இதற்கடுத்து, கலைஞர் கே.வி.சுதனின் இசைக்கச்சேரியும் மலேசிய எம்.ஜி.ஆர் லெட்சுமணனின் நடனமும் திருநங்கைகள் வழங்கும் பாடல் நிகழ்ச்சியும் நிகழ்வுன் சிறப்பு அங்கமாகத் திகழும்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, இந்நிகழ்வில் அதிர்ஷடக்குழுக்கலும் உண்டு.

மேலும் ஐந்து காதணிகளும் பத்து மிதி வண்டிகளும் நிகழ்வின் போது வழங்கப்படும்.

இக்கலைவிழாவிற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, கணபதிராவ், டாக்டர் சித்திமரியா, ராய்டு, கிளாசிக் சுப்பையா உட்பட ஏராளமான பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.