Home நிகழ்வுகள் புக்கிட் மெர்தாஜம் மணிமன்றத்தின் விருந்து நிகழ்வு

புக்கிட் மெர்தாஜம் மணிமன்றத்தின் விருந்து நிகழ்வு

640
0
SHARE
Ad

விருந்து நிகழ்வுபுக்கிட் மெர்தாஜம், பிப்.13- பினாங்கு புக்கிட் மெர்தாஜம் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 46 ஆம் ஆண்டு விருந்து நிகழ்வு வரும் 15.2.2013 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புக்கிட் மெர்தாஜம் அல்மா, காமான் ஸ்ரீகிஜாங்கில் அமைந்துள்ள பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விருந்து நிகழ்வு, புக்கிட் மெர்தாஜம் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவர் எஸ் வினோத்குமார் ஏற்பாட்டில் சமூகச் சேவையாளர் சேகர் இராமையா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் புக்கிட் மெர்தாஜம் வட்டாரத்தில் சமூகச் சேவையாற்றி வரும் 3 பிரமுகர்கள், அதோடு பிஎம்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற புக்கிட் மெர்தாஜம் மணிமன்றத்தில் இணைந்துள்ள மாணவர் மணிமன்ற மாணவர்களுக்குச் சிறப்புச் செய்யப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே, முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சுற்று வட்டாரப் பொது மக்கள், அரசியல் தலைவர்கள், பொது இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.