Home நிகழ்வுகள் கிள்ளான் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் குடும்ப மேம்பாட்டுக் கருத்தரங்கம்

கிள்ளான் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் குடும்ப மேம்பாட்டுக் கருத்தரங்கம்

666
0
SHARE
Ad

seminaraகிள்ளான், பிப்.13- வரும் 17.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிள்ளான்,  ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், மகளிர் குடும்ப சமூகநல அமைச்சின் ஆதரவில் தூய்மையான அன்பும், நேசமான குடும்பம் எனும் மேம்பாடுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கிற்கு நாடறிந்த வாழ்வியல், தன்முனைப்பு பயிற்றுநர் வி.எம் ஆறுமுகம், விரிவுரையாளர் டாக்டர் கே. அரிகிருஷ்ணன் இருவரும் இப்பயிலரங்கைச் சிறப்பாக வழிநடுத்துவர்.

இப்பயிலரங்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

#TamilSchoolmychoice

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிலரங்கில் காலை உணவு, மதிய உணவு, மாலை தேநீர்,  நற்சான்றிதழ், கோப்புகள் வழங்கப்படும்.

மேலும் இக்கருத்தரங்கிற்கு முன் பதிவு செய்துகொண்டு கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கோள்ளப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு, 012-2844910 மற்றும் 010-2498572