Home நிகழ்வுகள் சித்தார் இசை மேதை பண்டிட் ரவிசங்கரை கெளரவிக்கும் நிகழ்வு

சித்தார் இசை மேதை பண்டிட் ரவிசங்கரை கெளரவிக்கும் நிகழ்வு

890
0
SHARE
Ad

sittarகோலாலம்பூர், பிப்.13- தனித்துவம் நிறைந்த சித்தார் இன்னிசையில் பாண்டித்தியம் பெற்று உலக மக்களை கவர்ந்த இந்தியாவைச் சேர்ந்த சித்தார் இசை மேதை பண்டிட் ரவிசங்கரின் திறமை, பணிவு, தன்னடக்கத்தினால் இசைத்துறையில் அவர் தமக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார்.

மேலும் தற்போதுள்ள நவீன இசையினாலும் தனது தனித் திறமையான இன்னிசையாலும் முத்திரை பதித்துள்ளார்.

அண்மையில் தலைநகரில் நடந்த சித்தார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் இன்னிசை கெளரவ நிகழ்ச்சி குறித்த அறிமுக விழாவில் பேசிய டத்தோ முருகேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது உன்னதமான இசையின் ஈர்ப்பினால் கவர்ந்த இந்திய அரசு, கலை பண்பாட்டினை உலகிற்கு பரைசாற்றுவதற்காக அவரை இசை தூதராக நியமித்து கெளரவித்தது.

இதன் மூலம் அவர் பல நாடுகளுக்குச் சென்று  இசைப் பயணம் மேற்கொண்டார். உலக இசைத் துறையின் ஞானசிரியராகவும் அவர் விளங்கினார்.

எனவே அவரை கெளரவிக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யபட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் 15.2.2013 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ், டெம்பள் ஆஃப் ஆர்ஸில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சி வழி கிடைக்கப்பெறும்  நிதி  மூன்று அரசு சாரா இந்திய இயக்கங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக டத்தோ எஸ்.முருகேசன் கலந்து சிறப்பிப்பார்.

மேல் விவரங்களுக்கு, 012-226753 என்ற எண்களுக்கு தொடர்புக் கொள்ளவும்.