Home உலகம் துணை ஜனாதிபதி மீது மாவு கொட்டி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

துணை ஜனாதிபதி மீது மாவு கொட்டி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

364
0
SHARE
Ad

throw powder

கெளதமாலா, ஜன 16- கெளதமாலா நாட்டின் துணை ஜனாதிபதி மீது இரு பெண்கள் மாவு கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டிய சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள கெளதமாலா நாட்டின் துணை ஜனாதிபதி ரோக்சானா தன் மாளிகையின் முன் குழந்தைகளின் சத்துணவு குறித்து நேற்று முன்தினம் உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

அப்போது, அங்கிருந்த இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரோக்சானாவின் மீது உலர் மாவை கொட்டினர்.

இதனால் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கில் கைதான இரு பெண்கள், “எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு” என தாங்கள் செய்த செயலை நியாயப்படுத்துகின்றனர்.