Home உலகம் முஷாரப் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீ விபத்து

முஷாரப் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீ விபத்து

459
0
SHARE
Ad

Musharraf_2540710b

இஸ்லாமாபாத், ஜன 16- பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக அவர் கடந்த 2 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனையின் இதயவியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார். அம்மருத்துவமனையில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த தீ விபத்து மின்கோளாறு காரணமாக ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் இந்த தீ விபத்தில் முஷாரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.