இஸ்லாமாபாத், டிசம்பர் 18 – பெஷாவரில் தலிபான்கள் நடத்திய வெறியாட்டத்தில், இந்தியாவிற்கும் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பெஷாவர் நகரில், நேற்று முன்தினம் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினர், இராணுவப் பள்ளி ஒன்றில் புகுந்து அங்கிருந்த குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
132 குழந்தைகள் பலியான இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கி உள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலில் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆதரவளித்து வருகின்றது” என்று கூறியுள்ளார். இதே கருத்தினை ஜமா உத் தவா தீவிரவாதி ஹபீஸ் சயீத்தும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.