புதுடெல்லி, டிசம்பர் 18 – வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
அதே போல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரித்து முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிபதிகளை நியமித்து மூன்று மாதத்துக்குள் இவ்வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
முன்னதாக ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேற்முறையீட்டுக்கான கோப்புகளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனேவ சமர்ப்பித்துவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.