Home நாடு இந்திய – மலேசிய தமிழ் வர்த்தக கூட்டமைப்பின் மலேசியப் பிரிவு! சாமிவேலு அதிகாரபூர்வமாக தொடக்கி...

இந்திய – மலேசிய தமிழ் வர்த்தக கூட்டமைப்பின் மலேசியப் பிரிவு! சாமிவேலு அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்!

612
0
SHARE
Ad

942505_466615326783746_1518186939_nஜனவரி 17 – மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெருகி வரும் வணிகத் தொடர்புகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, இரண்டு நாடுகளிலும் உள்ள தமிழ் வணிகர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக ‘இந்தியா-மலேசிய தமிழ் வர்த்தக கூட்டமைப்பு என்ற அமைப்பு கோலாபம்பூரில் அதிகாரபூர்வமாக நேற்று தொடக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த அமைப்பை இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மலேசிய தமிழ் வர்த்தக கூட்டமைப்பு தமிழ் நாடு நிறுவனரான ஜெ.செல்வகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மலேசியக் கிளையின் தலைவரான கே.பி.மதிவாணனும் இந்த தொடக்க விழாவில் உரையாற்றினார்.1525557_615492138488218_253776658_n (1)

சாமிவேலு தனதுரையில் இந்தியர்கள் என்ற அளவில் பல வர்த்தக அமைப்புகள் மலேசியாவில் இயங்கி வந்தாலும் தமிழர்களை மலேசியா, இந்தியா ரீதியாக இணைக்கும் ஓர் வர்த்தக அமைப்பு தேவை என்று கருதியதால், இந்த அமைப்பை உருவாக்குவதற்கு தான் முன்னின்று உதவியதாகக் கூறினார்.

சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பெரிய அளவிலான காரியங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ் நாட்டை மட்டும் பிரதிநிதிக்காமல், மற்ற தென் இந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காண்பதிலும் உருவாக்குவதிலும் சிறு, நடுத்த வணிக நிறுவனங்களை வர்த்தக ரீதியாக இணைப்பதிலும் இந்த புதிய அமைப்பு பாடுபடும் என இதன் அமைப்பாளர்கள் இந்த நிகழ்வில் விளக்கிக் கூறினர்.

வர்த்தகம், கல்வி, வங்கிகள், சுற்றுலா, கலாச்சார பரிமாற்றம் போன்ற துறைகளில் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மலேசியத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்திய-மலேசிய வர்த்தக தமிழ் கூட்டமைப்பு செயல்படும்.