Home நாடு மலேசியாவில் தைப்பூச விழா கோலாகலம்!

மலேசியாவில் தைப்பூச விழா கோலாகலம்!

849
0
SHARE
Ad

thaipusam_chariot_procession_15012014-370x276ஜனவரி 17 – இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு மலேசியா முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் பெரும் திரளாக பக்தர்கள் கூடி காவடி எடுத்தும், அழகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

பத்துமலையில் நேற்று மாலை முதல் லட்சக் கணக்கான பக்தர்கள் தைப்பூச திருவிழாவை கொண்டாடிவருகின்றனர். பத்துமலைக்கு செல்லும் சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல் இன்றி காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

downloadஅதே போல் பினாங்கு, ஈப்போ, ஜோகூர் ஆகிய இடங்களில் உள்ள முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice