Home நாடு துன் சாமிவேலுவின் நினைவு நாள் – மஇகா தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது

துன் சாமிவேலுவின் நினைவு நாள் – மஇகா தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது

403
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவராக சுமார் 32 ஆண்டுகள் கட்சியை வழி நடத்தியவர் துன் ச.சாமிவேலு. அவரின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் அவரது நினைவலைகளுடன் கூடிய நிகழ்ச்சி  அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

“அரங்கம் நிறைந்த கூட்டத்தைப் பார்க்கையில் நெகிழ்ச்சியாக இருந்தது. துன் அவர்கள் இறந்த பின்பும் அவரை இத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியாக இருந்தது. போற்றினாலும், தூற்றினாலும் இந்த சமுதாயத்திற்காக அவரது சேவைகளையும், தியாகங்களையும் மறக்க முடியாது. மறுக்க இயலாது. நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என இந்த நினைவலைகள் நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice