Home வாழ் நலம் அதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது: ஆய்வில் தகவல்

அதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது: ஆய்வில் தகவல்

466
0
SHARE
Ad

choclate

லண்டன், ஜன 22 – அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்னடர்.

சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு 2–வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது.

#TamilSchoolmychoice

அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது.

ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. அவற்றை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் தாக்காது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.