Home தொழில் நுட்பம் யாஹு மின்னஞ்சல் பயனர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

யாஹு மின்னஞ்சல் பயனர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

475
0
SHARE
Ad

yahoo

கோலாலம்பூர், பிப் 4- யாஹு பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு பிரபல மின்னஞ்சல் சேவை வழங்குனர்களுள் ஒருவராகத் திகழும் யாஹு நிறுவனமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதங்களில் யாஹு தளத்தினை ஊடுருவும் செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த அதேவேளை தற்போது இணையத்தில் கடவுச் சொற்களை திருடுபவர்கள் (ஹேக்கர்கள்) மீண்டும் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவ செய்ய எத்தனித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனால் யாஹு பயனர்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு கைப்பேசிகளுக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்லது மாற்று மின்னஞ்சலின் ஊடாகவோ உள்நுழையும்போது எச்சரிக்கை செய்தியை பெறும்பொருட்டு தகவல்களை வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.