வாஷிங்டன், பிப் 4- அமெரிக்காவில் மாணவி வைத்திருந்த ஐபோன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரின் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் சட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்த ஐபோன், திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால், அவளது ஆடையிலும் தீப்பிடித்தது.
தீப்பிடித்த மாணவி பயத்தில் கூச்சலிட்டதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக அவள் ஆடையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் அம்மாணவியின் தொடையில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.