Home தொழில் நுட்பம் கேலக்ஸி நோட் ப்ரோ 12.2 – சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு

கேலக்ஸி நோட் ப்ரோ 12.2 – சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு

459
0
SHARE
Ad

Samsung Galaxy-Note-Pro-DSC05107-640x359

கோலாலம்பூர், பிப் 6- சாம்சங் நிறுவனமானது கேலக்ஸி நோட் ப்ரோ 12.2 (Galaxy Note Pro 12.2) எனும் புதிய தட்டைக் கணினி எதிர்வரும் 13ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

இச்சாதனத்தின் புகைப்படம் ‘ட்விட்டர்’ தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

12.2 அங்குல அளவு, 2560 x 1600 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution) உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த தட்டைக் கணினி ஆனது Quad Core Snapdragon 800 செயலி (processor) மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன், சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB தரப்படுகின்றது.