புது டில்லி, பிப்ரவரி 13 – கடந்த 15 ஆண்டுகளாக குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர அனுமதி வழங்கக் கூட மறுத்து வந்த அமெரிக்க அரசாங்கம், தனது கொள்கையில் இருந்து தற்போது இறங்கி வந்துள்ளது.
இன்று சரித்திர நிகழ்வாக தலைநகர் புதுடில்லியில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவுல் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சென்று கண்டார்.
நான்சிக்கு ஒரு பூக்கூடை தந்து வரவேற்ற மோடி, பின்னர் அவருடன் வந்த அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
இந்தியத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மோடிக்கு ஆதரவு சேர்க்கும் மற்றொரு நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய வெளியுறத் துறை அமைச்சு இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.