Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐடியூன்’ வானொலி உலகெங்கும் அறிமுகம்! முதலில் ஆஸ்திரேலியா!

ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐடியூன்’ வானொலி உலகெங்கும் அறிமுகம்! முதலில் ஆஸ்திரேலியா!

551
0
SHARE
Ad

iPhone radio 440 x 215பிப்ரவரி 17 – ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐடியூன் வானொலியை அமெரிக்காவுக்கு வெளியே, மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தும் படலம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, ஆஸ்திரேலியாவில் ஐடியூன் வானொலி தொடங்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மேக் (Mac) கணினிகளின் வழியாகவும், ஐஓஎஸ்7 இயங்குதளங்களைப் பயன்படுத்தும் சாதனங்கள் மூலமாகவும் இந்த வானொலியை ஆஸ்திரேலியர்கள் இலவசமாக கேட்டு மகிழலாம். இந்த இலவச வானொலியில் விளம்பரங்களும் இடம்பெறும்.

விளம்பரம் இல்லாமல் வானொலி கேட்க விரும்புபவர்கள் ஆண்டுக்கு 34.99 ஆஸ்திரேலிய டாலரை ஐடியூன் மேட்ச் (iTunes Match)என்ற ஆப்பிள் நிறுவனத்தின் துணை அமைப்பில் செலுத்தி அந்த வசதியைப் பெறலாம்.

இந்த புதுமையான வசதியின் மூலம் ஒருபக்கம் விளம்பரங்கள் மூலம் வருமானத்தைப் பெறும் ஆப்பிள் நிறுவனம் இன்னொரு பக்கம் சந்தா மூலமும் வருமானத்தைப் பெறும்.

அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டிருந்தாலும், பரிட்சார்த்த முறையில் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் ஏற்கனவே ஐடியூன் வானொலி சேவை தொடங்கப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐஓஎஸ்7 அறிமுகம் கண்ட காலகட்டத்தில் ஐடியூன் வானொலியையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் ஐடியூன் வானொலி சேவை தொடங்கியது.

ஆரம்பித்த ஒரே மாத காலத்தில் 1 பில்லியன் பாடல்கள் ஒலிபரப்பியுள்ளதாகவும், மில்லியன் கணக்கான பயனீட்டாளர்களைப் பெற்றுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஐடியூன் வானொலியை இணையம் மற்றும் செல்பேசி இணைப்புகளின் மூலமான முதன்மை வானொலியாக உருவாக்குவதில் ஆப்பிள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.