Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பு – சட்டமன்ற உறுப்பினர்களை மந்திரி புசார் காலிட் சந்திக்கவிருக்கிறார்

சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பு – சட்டமன்ற உறுப்பினர்களை மந்திரி புசார் காலிட் சந்திக்கவிருக்கிறார்

881
0
SHARE
Ad

3கோலாலம்பூர், பிப்.13-  13ஆவது பொதுத்தேர்தல் எப்போது என்று அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில மந்திரி புசார் காலிட் இப்ராஹிம்  இந்த வாரம் பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றால் சாப் கோ மே-க்குப் பின்னர் சட்டமன்றத்தைத் தமது அரசாங்கம் கலைக்கும் என காலிட் ஜனவரி 30ம் தேதி கூறியிருந்தார்.

“சாப் கோ மே-க்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கான தேதி பற்றிப் பிரதமர்  எந்த அறிவிப்பும் செய்யாவிட்டால் நாங்கள் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என அவர் சொன்னதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

Comments