Home கலை உலகம் சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா ஆஜராக சம்மன்

சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா ஆஜராக சம்மன்

587
0
SHARE
Ad

kasthuri-rajaசென்னை, பிப்.14- சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா, கோர்ட்டில் ஆஜராக, சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சவுகார் பேட்டையைச் சேர்ந்தவர் முகுல்சந்த் போத்ரா.

இவர் நேற்று, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
என்னிடம் சினிமா எடுப்பது தொடர்பாக, இயக்குனர் கஸ்தூரி ராஜா 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடந்த ஆண்டு, இந்த பணத்தை திருப்பி தருவதாக, என்னிடம் பத்திரங்கள் எழுதிக் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், குறிப்பிட்ட தேதியில் பணம் தரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்ட போது, கடந்த செப்டம்பரில், 25 லட்சம் ரூபாய்க்கு, “செக்” ஒன்றை அளித்தார்.

அதை குறிப்பிட்ட வங்கியில் போட்ட போது, பணம் இல்லாமல் திரும்பி விட்டது.

இந்த பிரச்னையில், கஸ்தூரி ராஜா, மீண்டும் உரியமுறையில், விளக்கம் அளிக்க மறுத்து விட்டார்.

மேலும், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதற்கும், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து, அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயராணி, வரும் 4ம் தேதி, கஸ்தூரி ராஜா நேரில் ஆஜராக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.