இந்தியா, பிப்.14- சந்தனக் கடத்தல் வீரப்பனின் நண்பர்கள் நால்வரின் கருணை மனுக்களை பிரணாப் நிராகரித்துள்ளார்.
மாதையன், பெலவேந்தன், சைமன், ஞான பிரகாசம் ஆகியோரது கருணை மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கிலடப்படலாம் என்று கூறப்படுகிறது.
மாதையன், பெலவேந்தன், சைமன், ஞான பிரகாசம் ஆகிய தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தற்போது பெல்காம் சிறையில் உள்ளனர்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி நேற்று முன்தினம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் சந்தனக் கடத்தல் வீரப்பன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். 1993-ல் நடந்த பாலாற்று குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர் , பாலாறு குண்டு வெடிப்பு உட்பட 3 வழக்குகளில் 124 பேர் மீது கர்நாடகம் குற்றம் சாட்டியது. இதில் 11 பேர் காயமடைந்தனர் .
வழக்கை விசாரித்த மைசூர் தடா நீதி மன்றம் 117 பேரை விடுதலை செய்தது.
எஞ்சிய 7 பேருக்கும் மைசூர் தடா நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் இந்த நான்கு பேருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.