Home உலகம் தேர்தலில் போட்டியிடும் 101 வயது நியூமேன்!

தேர்தலில் போட்டியிடும் 101 வயது நியூமேன்!

413
0
SHARE
Ad

imagesஹூஸ்டன்,பிப் 21 – அமெரிக்காவில் நடைபெற உள்ள, உள்ளாட்சி தேர்தலில், 101 வயது வேட்பாளர் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில், சரசோட்டா நகரில் வசிப்பவர், , 101. இந்த மாகாணத்தில் விரைவில் நடைபெற உள்ள, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து ஜோ நியூமேன் கூறியது அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் அதிருப்தியடைந்ததால், பொதுமக்களுக்கு நல்ல நிர்வாகத்தை அளிக்க விரும்புகிறேன்; 16 வயதில் இருந்து, நான் சந்தித்த, சமூக குறைபாடுகளுக்கு தீர்வு காண விரும்பினேன்.

#TamilSchoolmychoice

நான்  வாழ்ந்து முடிப்பதற்குள் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஏதாவது செய்யாவிட்டால், என்னுடைய முகத்தை, நான் எவ்வாறு கண்ணாடியில் பார்க்க முடியும்? என்னை பார்த்து, ‘முட்டாள்’ என்று கூறுவதை பொருட்படுத்தவில்லை.

குப்பனுக்கும், சுப்பனுக்கும் நல்ல சமூக முன்னேற்றத்தை அளிக்க வேண்டிய கடமை உள்ளது; சமூக முன்னேற்றங்களில் அக்கறை செலுத்தாத அமெரிக்க அரசு, புதிய திட்டங்களில் தன்னுடைய கவனத்தையும் செலுத்துகிறது.

எனவே, சமூகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தேர்தலில் போட்டியிடுகிறேன்.என நியூமேன் கூறியுள்ளார்.