பிப் 21- சிறப்பான தோற்றம் பெற விரும்புபவர் அனைவருக்கும் தடையாக விளங்குவது உடல் எடை ஆகும். எடையை நாம் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி என்று காண்போம்.
எடையை குறைக்க விரும்புபவரோ அல்லது எடையை அதிகரிக்க விரும்புபவரோ அல்லது தற்போதுள்ள எடையிலேயே தொடர விரும்புபவரோ, எதுவாயினும் இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரம் கொண்ட விளைவாகவே கருதப்படுகிறது.
சில நேரங்களில் நாம் அனைவருமே, கட்டுப்படுத்த முடியாத, விவரிக்க இயலாத வகையில் ஏற்படுகிற பசிக்கு பலியாக நேரிடுகிறது.
இந்த எதிர்பாராத பசியினால், அதிக கலோரிகள் கொண்ட கார்போஹைட்ரேட் நிறைந்த சிற்றுண்டி வகை உணவினை உண்ண நேரிடுகிறது.
இது உடல் எடை அதிகரிப்பிற்கு வழி வகுக்கிறது.
நமது ஆரோக்கியத்திற்கான சில உணவு தேர்வு முறைகள் இங்கே குறிப்பிடபபட்டுள்ளன.
இவை நமது வயிற்றினை நிரப்பி, நமது உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கின்றன. இந்த உணவு வகைகள், நமது உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் உதவிகரமானவை.
ஆப்பிள்-தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வது நம்மிடமிருந்து மருத்துவரை விலக்கியே வைத்திருக்கிறது. பசியை வெகு தூரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறது.கரையக்கூடிய நார்சத்தும், பெக்டினும் நிறைந்த சிறந்த மூல ஆதாரம் ஆப்பிள் ஆகும்.
இதில் நிறைந்துள்ள அதிகமான நார்ச்சத்தை மெல்லுவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளப்படுவதால், நமது வயிறு மூளைக்கு, திருப்தி அடைந்து விட்டதற்கான செய்திகளை அனுப்புகிறது.மேலும் அதிகம் உண்ணுவதையும் தவிர்க்கிறது.
இஞ்சி-இஞ்சி நமது பசியை கட்டுப்படுத்துகிறது. நமது தீராத பசியை குறைத்து திருப்தி அடைய செய்கிறது.GI மூலமாக மெதுவாக நகரும் ஊக்கியாக செயல்படுகிறது, ரத்த ஓட்டத்தின் மூலம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
தயிர்-சிறிதளவு தயிர் வழங்குகின்ற தையாமின், நமது பசியை கட்டுப்படுத்தவும் வளர்ச்சி பெறவும் உதவுகிறது.எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோயை எதிர்த்து போரிடும் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.