Home இந்தியா தமிழர்களை விடுவிக்க காங்கிரஸ் கடும் எதிர்பு-திமுக கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது

தமிழர்களை விடுவிக்க காங்கிரஸ் கடும் எதிர்பு-திமுக கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது

550
0
SHARE
Ad

Karunanidhi_con4539சென்னை, பிப் 21- 7 தமிழர் விடுதலை எனும் தமிழக அரசின் முடிவை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைப்பாட்டினால் கூட்டணி விவகாரத்தில் ஊசலாட்டமான நிலையில் இருந்த திமுக இனி காங்கிரஸ் பக்கமே எட்டிப் பார்க்காது என்றே கூறப்படுகிறது.

ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து திமுக கடந்த ஆண்டு வெளியேறியது. அதேபோல் காங்கிரஸ் கட்சியுடனான உறவையும் திமுக முறித்தது.

#TamilSchoolmychoice

இந்த முடிவுக்கு காரணம் திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் என்று கூறப்பட்டது. இதனாலே தமது மத்திய அமைச்சர் பதவியை மு.க. அழகிரி உடனே ராஜினாமா செய்யாமல் ஸ்டாலினை வெறுப்பேற்றும் வகையில் இழுத்தடித்தார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்தும் பேசி தாம் இணக்கமாக இருப்பதாக அழகிரி காட்டிக் கொண்டார். அதன் பின்னர் டிசம்பர் 15-ந் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்ற தீர்மானம் போடவும் ஸ்டாலின் காரணமாக இருந்தார் என்றே கூறப்படுகிறது.

பொதுவாக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தலைவர் மற்றும் பொதுச்செயலருக்கு அதிகாரம் கொடுத்துதான் தீர்மானம் போடப்படும். ஆனால் திமுகவின் பொதுக்குழுவில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்வதாக அறிவித்தார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் இதை வரவேற்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்த்து வருகிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று எதிர்ப்பு தெரிவித்தார். இன்று பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நடவடிக்கை எதிராக மேல்முறையீடும் செய்திருக்கிறது மத்திய அரசு.

இதுநாள் வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கூடவே கூடாது என்ற மு.க. ஸ்டாலின் நிலை இப்போது மேலும் உறுதியானதாக மாறியிருக்கிறது.

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என்று சொல்லுகிற சில திமுகவினர் வாதத்துக்கும் இனி வாய்ப்பு இல்லை. ராகுல் காந்தியே வந்து சந்தித்தாலும் காங்கிரஸுடன் திமுக கூட்டணி கிடையாது என்றே நம்பலாம். அப்படி கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கட்சியின் நிலைதான் திமுகவும் சந்திக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.