Home Featured தமிழ் நாடு சமத்துவ மக்கள் கட்சி-ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்!

சமத்துவ மக்கள் கட்சி-ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்!

719
0
SHARE
Ad

dmkசென்னை – சமத்துவ மக்கள் கட்சி, ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தேவர் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை தலைவர் ஆர்.கே.காளிதாஸ், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் என 25–க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

திருப்பூர் தெற்கு மாவட்டம், காங்கயம் நகர ம.தி.மு.க. தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிகுமார், நகர அவைத்தலைவர் காயத்ரி பி.சின்னச்சாமி, 4–ஆவது வார்டு செயலாளர் எம்.எஸ்.ஜெகதீசன், 12–ஆவது வார்டு செயலாளர் பி.சிவக்குமாரன் உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

#TamilSchoolmychoice

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக பேராயர் ஏ.எம்.சின்னப்பா, தென்னிந்திய திருச்சபையின் துணைத்தலைவர் பால் தாயானந்த் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.