கோலாலம்பூர் – மலேசியாவின் 1எம்டிபி மற்றும் பிரேசில் பெட்ரோபிராஸ் விவகாரங்கள் “வெளிப்படையாகத் தெரியும் ஊழல்” என்று சுவிட்சர்லாந்து நிதிக் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் சுவிஸ் நிதிச் சந்தை மேலாண்மை சபை (The Swiss Financial Market Supervisory Authority – Finma) வகைப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நிதி அமைப்பின் மூலமாக இந்த இரண்டு நிறுவனங்களில் நடந்த பணப்பரிமாற்றங்களைச் சுட்டிக் காட்டியுள்ள பின்மா தலைமைச் செயல் அதிகாரி மார்க் பிரான்சன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தற்போது எதிர்கொண்டு வரும் நிதிமோசடி அபாயங்களுக்கு 1எம்டிபி மற்றும் பெட்ரோபிராஸ் ஆகிய இரண்டு விவகாரங்களையும் உதாரணமாக மார்க் பிரான்சன் கூறியுள்ளதாக மலேசியாகினி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.