Home Featured இந்தியா அத்வானியின் மனைவி காலமானார்! மோடி-சோனியா-ஜெயலலிதா உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அத்வானியின் மனைவி காலமானார்! மோடி-சோனியா-ஜெயலலிதா உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

809
0
SHARE
Ad

advani-wifeபுதுடெல்லி – பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலாவுக்கு கடந்த புதன்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது.

சுயநினைவில்லாத நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83. மனைவியை இழந்து வாடும் அத்வானிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கமலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், விஜய்காந்த், வைகோ, தமிழிசை மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கள் தெரிவித்தனர்.

அத்வானி கடந்த 1965-ஆம் ஆண்டு கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயந்த் என்ற மகனும், பிரதிபா என்ற மகளும் உள்ளனர். வயது முதிர்ச்சியால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்தார். அவருக்கு ஞாபக மறதியும் இருந்ததாக கூறப்படுகிறது.