Home Featured தமிழ் நாடு மதுரையில் இன்று கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்!

மதுரையில் இன்று கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்!

731
0
SHARE
Ad

Karunanidhi-election-campaign-today-in-Maduraiமதுரை – மதுரையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் மதுரை வருகிறார்.

மதுரை அண்ணாநகரில் இன்று மாலை 5 மணி அளவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கருணாநிதி பேசுகிறார்.

கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள். கூட்டம் முடிந்த பின்பு மீண்டும் ஓட்டலுக்கு சென்று கருணாநிதி தங்குகிறார். நாளை காலை 11 மணி அளவில் விமானம் மூலம் சென்னை செல்கிறார் கருணாநிதி.