Home Featured தமிழ் நாடு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

652
0
SHARE
Ad

stalin_2816437fமதுரை – வேட்பாளர் பட்டியலை அறிவித்தவுடன் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முன்பே, தனது பிரச்சாரத்தை தொடங்கத் திட்டமிட்டார் ஸ்டாலின். மதுரையில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று விரும்பிய ஸ்டாலின், மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடையில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு பேசிய ஸ்டாலின், ‘‘அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… கண்ணகி நீதி கேட்ட ஊரில் நான் உங்களைத் தேடி, நாடி, நம்பி வந்துள்ளேன். வெறும் தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. தமிழ்நாட்டைக் காப்பாற்ற, உங்களைக் காப்பாற்ற இங்கு வந்துள்ளேன்.

சினிமாவில் ஒரு வில்லனிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவது போல, இங்கு ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன். மே 16-இல் ஒரு போர்க்களத்தைச் சந்திக்க உள்ளோம். அந்தப் போர்க்களத்துக்கு இன்று பூமிபூஜை போட வந்திருக்கிறேன்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா ஆட்சி, ஊழல் மிகுந்த ஆட்சி. முட்டையில்கூட ஊழல் செய்தவர்கள், கோட்டைக்குக்கூட வருவதில்லை. வந்தாலும் முறையாக வேலை செய்யாமல் ஓய்வெடுகிறார். மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுகிறது.

பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டணம் உயர்வு எனப் பல இன்னல்களைத் தமிழகம் சந்தித்தது. ஆனால் ஜெயலலிதாவோ, கொடநாடு சென்று ஓய்வெடுப்பதையே வேலையாகக் கொண்டு உள்ளார்’’ என ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.