Home Featured தமிழ் நாடு சசிகலா ஜெயலலிதாவின் பினாமி அல்ல – உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!

சசிகலா ஜெயலலிதாவின் பினாமி அல்ல – உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!

584
0
SHARE
Ad

jaya_4_2402588fபுதுடெல்லி – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, யாருக்கும் பினாமியாக செயல்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதடியுள்ளார்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு விவகாரத்தில், கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரனை, தற்போது உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வாதங்கள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது சசிகலா தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. அவரது தரப்பில் நடைபெற்ற இறுதி வாதத்தில், அவரது வழக்கறிஞர் வாதாடிய போது சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

#TamilSchoolmychoice

அவர் வாதாடும்போது “ஜெயலலிதா, சசிகலா இடையே தொடர்ச்சியாக பணிப்பறிமாற்றம் நடந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்ததால், வருமானத்தை பெருக்கியதாக கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை”.

“மேலும், சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை. தகுந்த சாட்சியங்கள் மூலம் ஏற்கனவே அது நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்று அவர் வாதாடினார். இன்னும் இளவரசி, சுதாகரன் தர்ப்பு இறுதி வாதங்கள் நடைபெற உள்ளது.