Home வாழ் நலம் அழகான தோற்றம் தரும் கேரட்!

அழகான தோற்றம் தரும் கேரட்!

903
0
SHARE
Ad

carrotsமார் 4 – பழங்களை விரும்பாதவரை காணமுடியாது. எத்தனையோ பழங்கள் இருந்தாலும் கேரட்டிற்கு  இருக்கும் மதிப்பே தனிதான்.  கேரட் கண்களுக்கு நல்லது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திற்கும்.

பெண்கள் கேரட் விதைகளை தங்களுடைய கர்பத்தின் தொடக்ககாலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்திகருச்சிதைவுக்கு காரணமாகும். நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்றுத்தின்றால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.

இதைத்தின்றால் உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும் சீரனத்தை துரிதப்படுத்தும். கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும்123 (4)_resize கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். கேரட் சூப் வயிற்றுப்போக்கை குனப்படுத்தும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பேருகும்.

#TamilSchoolmychoice

புற்றுநோய், ஏலும்புருக்கி, சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடேக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Carrot Juice-jpg-1213இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.

குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்தனர்.