என்னைப்பற்றியும் எனது குணத்தைபற்றியும் தனக்கு தானே முடிவு செய்து தீர்மானித்துக் கொள்பவர்களைபற்றி எனக்கு தெரியவந்தது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. மற்றவர்களைப்போல் சராசரி இயல்புகொண்ட சாதாரண மனிதன்தான். மற்றவர்களுக்கு எதனால் கோபம் வருமோ அந்த கோபம் எனக்கும் வரும்.
ஒரு மனிதனாக மற்றவர்களைப்போல் எனக்கும் சில உணர்வுகள் உள்ளது. ஆனால் உண்மையானவன். எனது பணியிலும், ரசிகர்களுக்கும் நம்பிக்கையுடையவனாக செயலாற்றுபவன். கேமரா முன் என்னால் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அதை வெளிப்படுத்துகிறேன்.
நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை. மற்ற விஷயங்களைபற்றி யாருக்கும் கவலை வேண்டாம். நல்லதோ கெட்டதோ, அசிங்கமோ எதுவாக இருந்தாலும் நான் நானாகவே இருக்கிறேன் என தனுஷ் குறிப்பிட்டிருக்கிறார். தனுஷுக்கு நெருக்கமானவர்கள் யாரோ அவரைபற்றி பேசியதை அறிந்தே அவர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டிருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டுவிட்டரில் இதுபோல் வெளியிடும் கருத்து, ரசிகர்கள், மீடியாவை சென்றடையும். அதனால் மறைமுகமாக கருத்து சொல்லாமல் யாரை பற்றி சொல்கிறார் என நேரடியாகவே சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே என கோடம்பாக்கத்தார் கிசு கிசுக்கிறார்கள்.