Home உலகம் 100க்கு ஒரு மதிப்பெண் குறைவால் வயிற்றில் ஊசிகளால் குத்திக் கொண்ட 9 வயது சீன மாணவன்!

100க்கு ஒரு மதிப்பெண் குறைவால் வயிற்றில் ஊசிகளால் குத்திக் கொண்ட 9 வயது சீன மாணவன்!

869
0
SHARE
Ad

fdd281b7-0e02-4b6e-9d64-8c83bab4208f_S_secvpfபெய்ஜிங், மார் 4 –  எதிர்பார்த்தைப் போல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க முடியாத ஏமாற்றத்தில் ஒன்பது வயது சீன மாணவர் ஒருவர் தனக்குத் தானே ஊசியால் வயிற்றில் குத்தித் தண்டனைக் கொடுத்துக் கொண்டுள்ளான். தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பது தான் மாணவர்களின் கனவு, லட்சியம் என்றே சொல்லலாம்.

ஆனால், எல்லாருக்கும் அது சாத்தியப் படுவதில்லை. அந்தவகையில் தேர்வில் எதிர்பார்த்தைப் போன்று நூறு மதிப்பெண்கள் எடுக்க முடியாத ஏமாற்றத்தில் சீனாவில் 9 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வயிற்றில் 4 தையல் ஊசிகளை குத்தித் தனக்குத் தானே விபரீத தண்டனைக் கொடுத்துள்ளான்.

சிறுவன் குளிக்கும்போது வயிற்று பகுதியில் வீக்கம் இருப்பதை பார்த்து அவனது தந்தை விசாரித்துள்ளார். ஆனால், அவன் மழுப்பி விட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கடுத்து சிறுவனுக்கு கடுமையான வயிற்றுவலி உண்டாகியுள்ளது. உடனடியாக சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

அப்போது மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் தான் சிறுவனின் தண்டனை விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி மருத்துவர்கள் சிறுவனது வைற்றில் இருந்த நான்கு தையல் ஊசிகளை அகற்றியுள்ளனர்.