Home வாழ் நலம் உடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தின் பழம்!

உடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தின் பழம்!

696
0
SHARE
Ad

Mangustan2_800பிப், 22 – மங்குஸ்தின் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். ஜூன்  முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும்.

இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல்  பகுதி தடிமனாக இருக்கும்.  மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு  கிடைக்கிறது.

கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக  இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

#TamilSchoolmychoice

பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது.கார்போஹைட்ரேட்,  புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.

அதிக அளவில் தாமிரம்,  மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது. உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும்,  இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும்  ஆற்றல் கொண்டது.

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு  வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை  இதற்கு உண்டு. கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண்  நரம்புகள் புத்துணர்வு பெறும்.
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும்.

இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி  விடுகின்றன.

இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது  அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

நாம் உண்ணும் உணவானது செரிமானம்  ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது.  மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில்  மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு  வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.